பு.மு. | பு.பி.

Untitled-1

     அதென்ன பு.மு. & பு.பி.? சொல்றேன், அதுக்கு முன்னாடி இத கேளுங்க. மனுஷனோட பிறவி குணம் ஆசை, நமக்கு எதுவுமே பத்தாது. இருக்கிறத வெச்சு சந்தோஷமா வாழறவங்க ரொம்ப கம்மி. அவங்க கூட முழுசா அதைக் கடைபிடிக்க முடியாது. வாழ்க்கை மேல நாம வெச்சிருக்குற அபிப்பிராயம் ரெண்டுல எதாவது ஒண்ணாதான் இருக்கும். ஒண்ணு போதும், இன்னொண்ணு போதாது.

ஆனா நான் எதுக்கு இதெல்லாம் சொல்லி மொக்கை போடறேன்னா, காரணம் இருக்கு. நம்ம ஆசைப்பட்டது, போதும்னு நெனச்சது, நம்ம இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எல்லாமே பொய்னு நெனைக்கற அளவுக்கு ஒரு விஷயத்தைக் கடந்திருப்போம். நம்ம வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட அந்த விஷயம் ஒரு படமா இருக்கலாம், ஒரு நபரா இருக்கலாம், ஒரு சம்பவமா இருக்கலாம், ஏன் ஒரு புத்தகமா கூட இருக்கலாம்..!

இதைக் கடந்து வந்த சிலருக்கும், அப்படி ஒன்னு நடக்கவே இல்லையேனு நினைப்பவர்களுக்கும் என்னால் செய்யமுடிஞ்ச ஒரு நல்ல காரியம் – வாழ்வை மாற்றும் புத்தகத் தொகுப்பு.

இங்க இருக்குற எதாவது ஒரு புத்தகமாவது வாழ்க்கை மேல நீங்க வெச்சிருக்குற அபிப்பிராயத்தை மாத்தும். ஏதோ யோசிச்சிட்டு, எங்கயோ வழி மாறி நடந்துட்டு, கண்ணைத் திறந்துட்டே தூங்கிட்டு இருக்க உங்களை உலுக்கி எழுப்பும் இந்த புத்தகங்கள். படித்து உணருங்கள் Dailyhuntல் மட்டும்!

பு.மு. – புத்தகத்திற்கு முன், பு.பி. – புத்தகத்திற்குப் பின்..!

டெய்லிஹன்ட் (Dailyhunt) – உங்கள் உலகம், உங்கள் மொழியில்..!

Android | iOS | Windows

உங்களுக்குள் இருக்கும் அந்நியன்!

     அந்நியன் என்றால் நமக்கெல்லாம் நினைவில் வருவது அம்பி, ரெமோ மற்றும் அந்நியன் என்ற மூன்று கதாபாத்திரங்கள். நமக்கெல்லாம் தெரிந்தது இவை மூன்றும் வெவ்வேறு மனிதர்கள் அல்ல, ஒரே மனிதனின் மூன்று குணாதிசயங்கள். அதுபோல், உங்களுக்குள்ளேயும் சில வேற்று குணம் படைத்த மனிதர்கள் உலவுகிறார்கள் என்றால் நம்பமுடியுமா? அதிர்ச்சியடைய வேண்டாம், விவரமாகச் சொல்கிறேன்.

     உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு பொருளை ஆசைஆசையாய் தேடிப்பிடித்து வாங்கியிருப்பீர்கள். ஆனால், அதை வாங்கிய பின் சில நேரங்களில் ஏதோ வினோத மனமாற்றம் ஏற்படும். அப்பொருளை வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு, இதைவிட்டு வேறு எதையாவது வாங்கியிருக்கலாமோ எனத் தோன்றும். அதனைப் பிடித்துதானே வாங்கினோம், பிறகு ஏன் இப்படித் தோன்றுகிறது என்று யோசித்ததுண்டா? அதற்கு காரணம் உங்கள் குணத்தில் ஏற்படும் மாற்றம் தான். இதையும் ஒரு வகை பிளவு ஆளுமை என்றே கூறலாம், அதைத்தான் ஆங்கிலத்தில் ஸ்ப்ளிட்-பெர்சனாலிட்டி என்பர்.

     அது ஏன் வருகிறது, அதற்கு என்ன தீர்வு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இப்படி உங்களுக்குள் ஏற்படும் மனநிலை மாற்றதிற்கு ஏற்ப, இருந்த இடத்திலேயே புத்தகங்களைப் படிக்க ஒரு வழியைச் சொல்கிறேன். காதல், காமம், கோபம், பயம், ஆசை, மன அழுத்தம் என உங்கள் மனநிலை எப்படி மாறினாலும் சரி; அதற்க்கேற்றவாறு புத்தகங்களை நொடியில் தேர்ந்தெடுத்து ஆசை தீர படிக்கலாம்.

     கேட்கும்போதே அது என்னவென்ற ஆர்வம் அதிகரிக்கிறது அல்லவா. அது நமது DailyHunt என்ற செயலி மூலம் தான் முடியும். இந்த கைபெசிக்கான மென்பொருள் உங்களிடம் இருந்தால் உங்கள் மனநிலை மாற்றத்திற்கு இது சரியான தீனியாய் அமையும். பல்வேறு வகையில், தேர்ந்தெடுக்க 11000த்திற்கு மேல் தமிழ்ப் புத்தகங்கள்.

     இனி உங்களுக்குள் அந்நியன் தோன்றினாலும் சரி இல்லை அம்பி, ரெமோ தோன்றினாலும் சரி, ஒரே கிளிக்கில் அதற்கான உலகைக் காணலாம்! உங்கள் மொபைலில் நிறுவ இங்கே கிளிக் செய்யவும்.

மீண்டும் 2015 பிறக்கிறது!

கால இயந்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், பயணித்ததுண்டா? சரி, பார்த்ததாவதுண்டா?

2015ஆம் ஆண்டு நிறைவடைந்து சில நாட்களே ஆன நிலையில், நாம் அனைவரும் அதன் நினைவுகளை புரட்டியிருப்போம். சிலருக்கு அது சிறந்த ஆண்டாகவும், சிலருக்கு நிறைவில்லாத ஆண்டாகவும் அமைந்திருக்கும்.

சற்று சிந்தியுங்கள், நீங்கள் 2015ல் இழந்த சிலவற்றை எங்கள் கால இயந்திரம் மீட்டுக்கொடுத்தால்?

அது நிஜமே! 2015ன் அற்புதமான புத்தக கலெக்சன், உங்களுக்கென்றே பிரத்யேகமாக! சென்ற வருடத்தில் நீங்கள் படிக்க மறந்த சில மகத்தான புத்தகங்களின் சிறப்புத்தொகுப்பு இங்கே.

சத்குரு, ராஜேஷ் குமார், இந்திரா சௌந்தரராஜன், கோபிநாத், ஜெயகாந்தன் மற்றும் பல எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு. காதல், காமம், அரசியல், க்ரைம், சிறுவர் ஸ்பெஷல் என பல்வேறு வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காவியங்கள் இவை.

இது சரியாக இருக்குமா? இது நமக்கு அவசியமா? என்று பலமுறை யோசித்து சில அரிய பொக்கிஷங்களை எளிதில் தவறவிடுகிறோம். அப்படி நீங்கள் படிக்கத்தவறிய காவியங்களை, தேடிப்பிடித்து தொகுத்து வழங்குகிறோம். இந்தக் கடைசி வாய்ப்பையும் தவறவிடாதீர்கள்.

நமது அண்ணாச்சி பாணியில் கூறினால் “எல மிஸ் பண்ணிடாதீக; அப்றோம் வருத்தப்படுவீக!”.

வருத்தப்பட விரும்பாதவர்கள், 2015ன் சிறந்த 50 புத்தகதொகுப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும். இந்த நூலமுதங்களை சுவை மாறாமல் உண்டு மகிழுங்கள்!

சென்னையில் வெள்ளம் ஹெல்ப்லைன்

chennai floods

இயற்கை சென்னை நகரத்தின் மீது பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக மொத்த நகரமும் வெள்ளக் காடாக மாறி, மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் அவர்களது உடமைகள் மிகுந்த அளவில் சேதமடைந்துள்ளது, இன்னும் மழை குறைத்த பாடில்லை.

Dailyhunt சென்னை மக்களுக்கு உதவ விரும்புகிறது, இந்த இக்கட்டான சூழ்நிலையில் குறிப்பாக மக்கள் பாதுகாப்பாக இருக்க சேவைகளை அணுக. மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பயன்படும் சில முக்கிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது

மரம் விழுந்தது மற்றும் நீர் தேங்கியிருந்தால் – 1913
கழிவுநீர் வழிதல் ( சென்னை மாநகராட்சி ) – 45674567
விஷ ஜந்துக்களை கையாள – 22200335 (வன துறை )
ப்ளூ கிராஸ் – 9176025265
மின் தடை (அ) மின் வெட்டு  –  1912
மாவட்ட அவசரநிலை எண் – 1077

திருவெற்றியூர் – 9445190001
மணலி – 9445190002
தேனாம்பேட்டை – 9445190009,
மாதவரம் – 9445190003
ஆலந்தூர் – 9445190012,
அடையாறு – 9445190013,
தண்டையார் பேட்டை – 9445190004
ராயபுரம் – 9445190005
திரு. வி.க. நகர் – 9445190006
கோடம்பாக்கம் – 9445190010
வளசரவாக்கம் – 9445190011
பெருங்குடி – 9445190014
சோழிங்க நல்லூர் – 9445190015
அண்ணாநகர் – 9445190008,
அம்பத்தூர் – 9445190007

ராணுவம் – 98402951003,

வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை – 044-28593990, 28410577, 9445869843, 9445869847 உங்களுக்கு உறைவிடம் தேவைபட்டால் உங்களுக்கு வேண்டிய விடுதிகளை பார்க்க இங்கே அழுத்தவும்

மழை வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை மீட்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் –  9840293438 நீங்கள் எந்த வகையிலாவது நன்கொடை செய்ய விரும்பினால், பார்க்க   Facebook page of Chennai Cares அல்லது Women of Worth நீங்கள் சென்னை மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், பார்க்க, volunteer.org .  சென்னை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு தங்க இடம் தர விரும்பினால் இங்கே பதிவு செய்யவும்  எந்த நேரத்திலும் ,

நீங்கள் ஹேஸ்டேக் (hashtag) பயன்படுத்தி ட்விட்டரில் சமீபத்திய தகவல் கண்டுபிடிக்க முடியும் #ChennaiRainsHelp

நியுஸ்ஹன்ட் டை டெய்லிஹன்ட் ஆக்கிவிட்டீர்களா ?

நண்பர்களே !

உங்கள் அபிமான  செயலி நியுஸ்ஹன்ட் தற்போது  டெய்லிஹன்ட் ஆகிவிட்டது !  இந்த புதிய செயலி உங்களிடம்  இல்லை என்றால் நீங்கள் சுவாரசியமான பலவிஷயங்களை மிஸ் செய்கிறீர்கள்.

downloadapp11

டெய்லிஹன்ட்  டில்  நியுஸ்ஹன்ட்  உள்ள அனைத்து சுவரசியமான விஷயங்களும் உள்ளன. இந்த  செயலி தற்போது  உங்கள் விருப்பமான மொழியில்  உள்ளது. இங்க பல விஷயங்கள் உங்களுக்கு தேவையான  செய்திகள் , புத்தகங்கள் , காமிக்ஸ்கள்  தேட உதவுகின்றன . இன்னும் ஏன்  காத்திருக்கிறீர்கள் ? இன்றே  டவுன்லோடு  செய்யுங்கள் !

 

மீண்டும் கப்பர் … இப்பொழுது நியுஸ்ஹண்ட் – ல்

இந்தியாவின்  புகபெற்ற வில்லனும் அடிக்கடி மக்களால் குறிப்பிடப்படும்  கதாபாத்திரமான கப்பார் சிங், இப்பொழுது தனக்கென பிரத்யேக காமிக்ஸ் புக்கில் வலம்வரப் போகிறார்.

ஷோலே ; அனைவரிடமும் அறியப்பட்டதும்  லட்சக்கணக்கான மக்களிடம் நாடெங்கும் மிகவும் புகழ்பெற்றதுமான தொரு  இந்தி சினிமா. காலத்தைக் கடந்த ஒரு மைல்கல் சினிமாவாக பாலிவுட்டில் திகழ்கிறது. இப்பொழுது முதல்முறையாக கப்பார் சிங்கிக்கின்  மூலமும் , ரகசிய வாழ்வையும் பற்றிய உண்மை வெளிவருகிறது !

பாலிவுட் சினிமாவின் ஒப்பற்ற வில்லன் , ஷோலே படத்தின் மூலம் 30 வருடங்களாக ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் கொள்ளைக்காரன் ,கப்பார் சிங்கின் சாகசத்தின் இணையுங்கள் !
அவனது கடந்தகால வாழ்வுக்குச் சென்று , இதுவரை கண்டிராத பயங்கர சம்பவங்களையும் , ஒரு அப்பாவி சிறுவன் காலத்தைவென்ற வில்லனாகவும் ,மிகவும் வியக்கப்படும்  ஆளுமையாகவும் மாறியதைக் காணுங்கள் !